ஞாயிறு, 1 அக்டோபர், 2023

திருமல்வாடி

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கணபதி பஞ்சாயத்தில் அமைந்துள்ள ஊர் திருமல்வாடி கணபதி பஞ்சாயத்தில் தலைமை ஊர் மற்றும் 1921 ல் தொடங்கப்பட்ட அரசு பள்ளி உள்ளது அஞ்சல் அலுவலகம் அமைந்துள்ளது வன்னியர், ஒக்கலிகர், பறையர், பார்ப்பனர், கன்னட ஐயர், போயர்‌, தொம்பர், நாயக்கர் போன்ற சமூகத்தினர் வசிக்கின்றனர். பழமையான மல்லேஸ்வரன் சிவன் கோவில் மாணிய நிலத்துடன் உள்ளது பெருமாள், நாகர் கோவில்களும் மானிய நிலத்துடன் அமைந்துள்ளன ஊர் மாரியம்மன் கோவில் ஊர் முனியப்பன் காளியம்மன் கோவில்களும் வன்னியர்களின் திரௌபதி அம்மன் கோவிலும் அமைந்துள்ளன. தேவர்சுனை மாரியம்மன், கொம்முலுகுட்டை மாரியம்மன், சென்றாயன் சாமி கோவில்களும் அமைந்துள்ளன. திரு+மலை+ அடி = மூன்று மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஊர் என்பதால் திருமல்வாடி என்ற பெயர் பெற்றது! சென்றாயன் சாமி எனும் திருமலை பெருமாள் கோவிலில் அடிவாரத்தில் இந்த ஊர் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்று இருக்கலாம்! மூன்று மலைகளும் ஒரு ஏரியும் சிறு சிறு குட்டைகளும் உள்ளன., முழுவதும் விவசாயத்தை மட்டுமே மக்கள் நம்பி உள்ளனர். தொல்லியல் அடையாளமாக நாட்டான் கல் எனும் குத்துக்கல் ஒன்று உள்ளது,

ஆக்கம் இராஜ்குமார் ஆறுமுகம் MA., B.ED, Mphil., :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக